இந்தியா

5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27-ம் தேதி முதல் பொதுத்தேர்வு.. உயர்நீதிமன்றம் அனுமதி!

Published

on

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்றைய முன்தினம் இரண்டு நீதிபதிகள் தலைமையிலான விசாரணைக்கு வந்தது.

அப்போது 10-ம் மற்றும் 12-ம் வகுப்புக்கு முன்பு பொதுத்தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மீதான பயத்தைப் போக்கும்.

மேலும் இந்த 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு திறனைச் சோதிப்பதற்காகவே தவிர, மாணவர்களைத் தோல்வியடையச் செய்யப் போவதில்லை என வாதாடப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு எழுத அனுமதித்தனர். மேலும் எந்த மாணவரையும் தோல்வியடை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தித் தீர்ப்பை வழங்கினர்.

எனவே திட்டமிட்டபடியும் மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version