இந்தியா

பாலியல் தாக்குதலை பெண்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ள வேண்டும்: காங். எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published

on

பாலியல் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோசமாக பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக பெண் குழந்தைகள் பலர் தினந்தோறும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தாக்குதலில் இருந்து பெண்களை காப்பாற்ற போக்சோ சட்டம் உள்பட பல கடுமையான சட்டங்களை ஏற்படும் பாலியல் தாக்குதல் எண்ணிக்கை குறையவில்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் நீதிபதிகள் கூட பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் ஒரு பெண் நீதிபதி கூறிய பாலியல் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார் என்பவர் பேசியபோது ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் போது தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு கூற்று உள்ளது என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமாரின் பேச்சை கண்டிக்காத சபாநாயகர் தங்களது அனுபவத்தை வரவேற்பதாக சிரித்துக்கொண்டே பதில் அளித்ததும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version