சினிமா செய்திகள்

வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?

Published

on

தனுஷ் நடிப்பில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘கர்ணன்’ திரைப்படம்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ‘கர்ணன்’. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பிரச்சனை பற்றிய பதிவாக அமைந்துள்ள கர்ணன் திரைப்படத்திற்கு தமிழக அளவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் கர்ணன், சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் கர்ணன், எந்தளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்கிற தகவல் வந்துள்ளது.

திரைப்பட வர்த்தக நிபுணரான தரன் ஆதர்ஷ், கர்ணன் படம், ஆஸ்திரேலியாவில் 45.25 லட்ச ரூபாயும், நியூசிலாந்தில் 5.94 லட்ச ரூபாயும், சிங்கப்பூரில் 50.62 லட்ச ரூபாயும் வசூலித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ணன் திரைப்படம் மூலம் பல இடங்களில் துவண்டு கிடந்த தியேட்டர் வர்த்தகம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளதாகவும் தரன் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version