சினிமா செய்திகள்

உதயநிதி கோரிக்கையால் ‘கர்ணன்’ படத்தில் ஏற்பட்ட மாற்றம்!

Published

on

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இருப்பினும் இந்த படத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் நிகழ்ச்சி அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்றும் ஆனால் அது திமுக ஆட்சியில் நடைபெற்றது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்

இதுகுறித்து தான் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு அவர்களிடம் பேசியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அதை மாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் உதயநிதி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது உதயநிதியின் கோரிக்கையை ஏற்று அந்த காட்சி மாற்றப்பட்டுள்ளது. 95 ஆம் ஆண்டு நடைபெற்றதாக அந்த நிகழ்வு காட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது 90களின் பிற்பகுதியில் இருந்து என்று மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version