சினிமா செய்திகள்

2 சூப்பர்ஹிட் பாடல்களை அடுத்து 3வது பாடல்: ‘கர்ணன்’ தயாரிப்பாளர் அறிவிப்பு!

Published

on

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற முதல் சிங்கிள் பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான இந்த பாடலை கிராமிய பாடகி மாரியம்மாள் என்பவர் இருந்தார் என்பதும்ம் அவர் இந்த ஒரே பாடலின் மூலம் உலகப் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சமீபத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியானது. இசையமைப்பாளர் தேவா பாடிய இந்த பாடலும் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த இரண்டு பாடல்களும் ஹிட் ஆன நிலையில் வரும் மார்ச் 11ஆம் தேதி 3-வது சிங்கிள் பாடல் ரிலீசாக உள்ளது

‘திரெளபதியின் முத்தம்’ என்று தொடங்கும் இந்த பாடல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version