சினிமா செய்திகள்

நிறைமாத கர்ப்பிணியான கரீனா கபூர் ‘Baby Bump’ உடன் இருக்கும் க்யூட் படம்!

Published

on

பாலிவுட் நடிகை கரீனா கபூர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கணவர் சயிஃப் அலி கானுடன் தய்மூர் என்னும் ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார் கரீனா. தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் டிவி ஷோக்களிலும் கரீனா கலந்து கொண்டு வந்தார்.

குறிப்பாக அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் கரீனா. கொரோனா காலத்திலும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இந்தப் படப்பிடிப்பிலும் கரீனா கலந்து கொண்டார்.

 

இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளன. கர்ப்பமாக இருக்கும் கரீனா, தனக்கு வந்துள்ள ‘பேபி பம்ப்’ கொண்ட க்யூட் படத்தை வெளியிட்டுள்ளார். இதற்குப் பலரும் தங்கள் அன்பைப் பொழியும் வகையில் கருத்திட்டு வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கரீனா கபூர், சயிஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு தய்மூர் அலி கான் என்னும் குழந்தை அவர்களுக்குப் பிறந்தது.

 

 

 

Trending

Exit mobile version