சினிமா செய்திகள்

சயிஃப் அலி கான் கரினா கபூர் ஜோடிக்குப் பிறந்தது ஆண் குழந்தை!

Published

on

பாலிவுட் நடிகர்கள் கரீனா கபூர், சயிஃப் அலிகான் ஜோடிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

கரீனா கபூருக்குக் காலை 4:45 மணியளவில் பிரசவ வழி ஏற்பட்டதை அடுத்து, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்த ஜோடிக்கு 4 வயதில் டைமுர் அலிகான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சயிஃப் அலிகான் தல அஜித் நடிப்பில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version