விமர்சனம்

காலம் கடந்து போன கதை – கண்ணே கலைமானே விமர்சனம்!

கண்ணே கலைமானே என படத்திற்கு பெயர் வைத்து விட்டோமே என எண்ணிய சீனு ராமசாமி, நாயகன் உதயநிதிக்கு கமலக் கண்ணன் என்றும் தமன்னாவுக்கு கலைமான் என்றும் பெயரை வைத்துள்ளார்.

Published

on

கண்ணே கலைமானே என படத்திற்கு பெயர் வைத்து விட்டோமே என எண்ணிய சீனு ராமசாமி, நாயகன் உதயநிதிக்கு கமலக் கண்ணன் என்றும் தமன்னாவுக்கு கலைமான் என்றும் பெயரை வைத்துள்ளார்.

நிமிர் படத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினையும், தர்மதுரை படத்தில் இருந்து தமன்னாவையும் எடுத்து எடிட் செய்தாலே கண்ணே கலைமானே படத்தை உருவாக்கி விடலாம் என்பது போல படத்தை இயக்குநர் சீனு ராமசாமி எடுத்துள்ளார்.

நீர்ப்பறவை, தர்மதுரை படங்களை எடுத்த சீனுராமசாமியின் படமா இது என பார்க்கும் அனைவரையும் கேட்க வைக்கும் அளவிற்கு படம் சுமாராக வந்துள்ளது.

பிஎஸ்சி விவசாயம் படித்துவிட்டு, இயற்கை உரத்தை தயாரித்து விவசாயிகளுக்கு விற்று வரும் கமலக்கண்ணன், அந்த ஊர் விவசாயிகளுக்கு கடன்களையும் வாங்கி தருகிறார்.

அந்த ஊருக்கு வங்கி அதிகாரியாக வரும் கலைமான், உதயநிதி ஸ்டாலின் விவசாயக் கடன் கட்டவில்லை என்று கோபம் கொள்கிறார். ஆனால், அது விவசாயிகளுக்காக அவர் செய்த உதவி என்று தெரிந்தவுடன், மோதலில் தொடங்கிய சந்திப்பு வழக்கம் போல காதலில் மலர்கிறது.

ஆனால், இதனை உதயநிதியின் அப்பா பூ ராம் மற்றும் அப்பத்தா வடிவுக்கரசிக்கு பிடிக்கவில்லை. பத்து நாள் பட்டினி கிடந்து தமன்னாவை கல்யாணம் செய்கிறார்.

என்னடா படம் அதுக்குள்ள முடிந்து விட்டதா என்று பார்த்தால், அதற்கப்புறம் தான் பிளேட் போட்டு அறுக்கின்றார் இயக்குநர்.

சிம்பிளாக முடிந்து விட்ட கதையை டுவிஸ்ட் வைக்கிறேன் என்ற பேர்வழியில் மொக்கை கதைகளாக அடுக்கிக் கொண்டு கிளைமேக்ஸ் முன்னதாக, வடிவுக்கரசிக்கு ஒரு பவர்புல் காட்சி வைத்து படத்தை முடிக்கிறார்.

 

சீக்கிரமாக திருமணம் நடந்தாலும், பொண்டாட்டி தாசனாக மாறிவிட்ட உதயநிதிக்கும் பாட்டிக்கும் ஏற்படும் பாசப் போராட்டத்தால், திருமண உறவில் நிகழும் சாதாரண குழப்பங்களை கண்ணே கலைமானே என படமெடுத்து பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளார் இயக்குநர்.

இந்த வாரம் வந்த எல்.கே.ஜி மற்றும் டுலெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கண்ணே கலைமானே ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகியுள்ளது.

நடிப்பில் உதயநிதி ஒருபடி முன்னேறியுள்ளது நன்றாகவே தெரிகிறது. அவரை நடிப்பில் முன்னேற்ற இயக்குநர் சீனுராமசாமி, ஒரு படி கீழே இறங்கியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், 80களில் படம் பார்த்த ஃபீல் வருகிறது. அனைத்துமே ஏற்கனவே கேட்ட பழைய பாடல்கள் போல இருப்பதால், பெரிதாக ரசிக்க முடியவில்லை.

சினி ரேட்டிங்: 2.5/5.

seithichurul

Trending

Exit mobile version