சினிமா செய்திகள்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்துவிட்டாரா? கதறியழும் ரசிகர்கள்

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மணி நேரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. புனித் ராஜ்குமாரின் காப்பாற்ற போராடி வருவதாக மருத்துவர்கள் கூறிய சற்றுமுன் அவர் காலமானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூர் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மருத்துவமனை முன்பு குவிந்திருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் புனித் ராஜ்குமார் மறைந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்தும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் புனித் ராஜ்குமார் குறித்து வரும் செய்தி கேட்டு பெங்களூர் மருத்துவமனை முன்பு ரசிகர்கள் கதறி அழும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version