சினிமா

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

Published

on

கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திரா ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ‘கப்ஜா’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்திற்காக நடிகர் உபேந்திரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க விருப்பம் இருப்பதைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, “நடிகர் ரஜினிகாந்த் சினிமாவை பொருத்தவரை எப்போதுமே சூப்பர் ஸ்டார். அவருடன் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பல நடிகர்களின் விருப்பமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு உபேந்திரா இயக்கியுள்ள ‘சூப்பர்’ படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதோடு உபேந்திரா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version