தமிழ்நாடு

முச்சுவிட சிரமம்… மருத்துவமனையில் கனிமொழியின் கணவர்: ஓடிச்சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

Published

on

திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

#image_title

சிங்கப்பூரில் வசித்து வந்த கனிமொழியின் கணவர் அரவிந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூர் சென்று மருத்துவமனையில் தங்கி தனது கணவரின் உடல்நிலையை கவனித்து வந்தார் கனிமொழி. இதனையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழகத்தில் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்தனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.

seithichurul

Trending

Exit mobile version