தமிழ்நாடு

தமிழக ஊர்திகள் புறக்கணிப்பு: கனிமொழி குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்!

Published

on

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக ஊர்தியில் உள்ள புகைப்படங்கள் தேசிய அளவில் புகழ்பெற்றவர்களின் புகைப்படங்கள் இல்லை என்று கூறி மத்திய அரசு அந்த ஊர்திகளை புறக்கணிக்கப்பட்ட தாக கூறப்படுகின்றன

இதுகுறித்து திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:

குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.

கனிமொழியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரும் பதிலளித்துள்ளனர். அவர்கள் கூறிய பதில்கள் பின்வருமாறு:

எஸ்ஜி சூர்யா: குடியரசு தின அணி வகுப்பில் மாநில ஊர்திகள் இடம்பெறும். தமிழக ஊர்தி 2014, 2016, 2017, 2019, 2020, 2021 என கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை இடம்பெற்றது. கேரள ஊர்தியோ 2018, 2021 என 2 முறையும், ஆந்திர ஊர்தி 2015, 2020 & 2021 என 3 முறையும் மட்டுமே இடம்பெற்றது. இதில் அரசியல் துளியும் இல்லை

காயத்ரி ரகுராம்: இந்த ஆண்டும் திமுக இளைஞரணி உங்களை சென்னை சங்கமம் செய்ய அனுமதிக்கவில்லை. அது என்ன ஆனது?

seithichurul

Trending

Exit mobile version