சினிமா செய்திகள்

நான் பிக்பாஸ் வீட்டிற்கு போகிறேனா? கனி அளித்த பதில்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. ஏற்கனவே ராதாரவி, மன்சூரலிகான் உள்பட பலரது பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் சமூக கடந்த சில நாட்களாக கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் பவித்ரா, கனி மற்றும் சுனிதா ஆகிய மூவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கனி, பிக்பாஸில் குழுவினர் இதுவரை தன்னை வந்து அணுகவில்லை என்றும் ஒருவேளை அணுகினால் நான் அதனுடைய அப்டேட்டை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இப்போது வரை கனியை பிக்பாஸ் குழுவினர் அணுகவில்லை என்பது உறுதியாகி உள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு சென்றால் தற்போது உங்களுக்கு இருக்கும் நற்பெயர் கெட்டுவிடும் என்றும் கனி ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கனி செல்வார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கனியின் தங்கை விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்று நல்ல பெயருடன் தான் திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version