சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி: கனி தான் டைட்டில் வின்னரா?

Published

on

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இறுதிப்போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடக்க இருப்பதாகவும் நான்கு சுற்றுக்களில் ஒவ்வொரு போட்டியாளரும் சமையல் செய்யவேண்டும் என்றும் கூறப்படுகிறது. கனி, அஸ்வின், பாபா, பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் இறுதிப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர்களில் யார் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் இருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் சமூக வலை தளங்களில் கசிந்த தகவலின்படி டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் இரண்டாவது இடத்தை ஷகிலாவும் மூன்றாவது இடத்தை அஸ்வினும் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகவும் இதனை அடுத்து தற்போது எடிட்டிங் குழுவில் இருந்து கசிந்த தகவலின்படி தான் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது மட்டும்தான் டைட்டில் வின்னர் யார் என்பது உறுதிபடத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version