இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரிஹானா… Fool, dummies எனத் திட்டி அசிங்கப்படுத்திய நடிகை கங்கனா!!

Published

on

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. பாப் பாடகரும், பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே உலகப் புகழ் பெற்ற இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்கும், தனது ஆதரவைப் பதிவிட்டுள்ளார். இது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் கவனம் கிடைத்துள்ளது மத்திய அரசுக்கு மேலும் அழுத்தங்களை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ரிஹானாவின் கருத்துக்குப் பொங்கி எழுந்துள்ள நடிகை கங்கனா ரணாவத், அவரை கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார்.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக அவர்கள் குடியரசு தினமான, ஜனவரி 26 ஆம் தேதி, டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இந்நிலையில் மீண்டும் மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புது வித போராட்ட யுக்தியைக் கையில் எடுக்க உள்ளனர்.

அதன்படி, வரும் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். அதன்படி சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்குக் கடந்த சில நாட்களாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல போராட்டக் களத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதியையும் துண்டித்துள்ளது அரசுத் தரப்பு. இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் தான், அதற்கு கவனம் சேர்க்கும் வகையில் ரிஹானா ட்வீட்டியிருந்தார். அவர், ‘இது குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?!’ என்று கேட்டு சி.என்.என் செய்தி நிறுவனத்தின் ஒரு செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

அவரைப் போலவே கிரெட்டாவும், ‘நாங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்றுள்ளனர்.

இந்நிலையில் ரிஹானாவின் பதிவிற்கு கங்கனா, ‘விவசாயிகள் போராட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை. காரணம் அவர்கள் விவசாயிகள் இல்லை, தீவிரவாதிகள். அவர்கள் இந்தியாவைப் பிரித்து, சீனாவின் ஆதிக்கத்தை ஓங்க வைக்கப் பார்க்கின்றனர். அமெரிக்காவை சீனாவின் காலனியாக மாற்றியது போலவே இங்கேயும் செய்யப் பார்க்கிறார்கள். எனவே அமைதியாக அமர்ந்திரு முட்டாளே (Fool), உங்களைப் போல எங்கள் தேசத்தை நாங்கள் விற்கப் போவதில்லை டம்மீஸ்.’ என சர்ச்சைக்குரிய பதிலைப் போட்டுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version