சினிமா செய்திகள்

ஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்!

Published

on

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாகத் தலைவி உருவாகி வருகிறது.

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஒல்லி பெல்லியாக இருக்கும் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் எப்படி நடிப்பார் என்ற கேள்விகளும் எழுந்தது.

தலைவி படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதும் ஜெயலலிதாவா இது? ஏன் இப்படி தவறான தேர்வை ஏ.எல்.விஜய் தேர்வு செய்தார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்துக்காக கங்கனா ரணாவத், தனது உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்துவிட்டாராம்.

இப்போது படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில், யோகா செய்வது போல ஒரு படத்தை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தலைவி படம் ஷூட்டிங் முடிவடைய உள்ளது, எனவே முன்பு இருந்த உடல் நிலைக்கு ஒல்லியாகவும், உடலின் தோற்றத்தை வளைவு நெளிவுடன் மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version