சினிமா செய்திகள்

தனக்குத் தானே பயோபிக் எடுக்கப் போகும் கங்கனா!

Published

on

அரசியல், விளையாட்டு, சினிமா என்ற பல துறைகளில் சாதித்தவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் என பலரை பற்றிய பயோபிக் படங்கள் பாலிவுட்டில் ஏராளமாக வர தொடங்கி விட்டன.

குடியரசு தினத்துக்கு வெளியான ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு மணிகர்ணிகா என்ற பெயரில் வெளியானது. மணிகர்ணிகா படத்தில் நடித்தது மட்டும் அல்லாமல் இன்னொரு இயக்குநராகவும், இறுதியில் கங்கனா மட்டுமே இயக்குநர் என்றும் மாறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான், ஆலியாபாட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தனக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற நேரடி குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இந்நிலையில், தற்போது அடுத்ததாக அவர் தனது வாழ்க்கையை பற்றிய பயோபிக்கையே எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கங்கனா ரனாவத்தின் வாழ்க்கை வரலாறு படத்தை கங்கனா ரனாவத்தே இயக்கி நடிக்க உள்ளாராம்.

மேலும், ரித்திக் ரோஷன், கரன் ஜோஹர் என பலரை இந்த படத்தில் வெளிச்சப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பாலிவுட்டையே அதிரவைத்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version