தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளருக்கு கொரோனா: மாணவர்களுக்கு பரவியதால் பரபரப்பு!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் 2 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் வழிபாட்டு முறைகள் அளிக்கப்பட்டன என்பதும் அதனை பின்பற்றி அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த அடுத்த நாள் முதலே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என 249 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நேற்று வந்த நிலையில் 2 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அந்த இரண்டு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஏற்கனவே தஞ்சாவூர், திருப்பூர், அரியலூர், கோவை, நாமக்கல், செங்கல்பட்டு உள்பட பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version