சினிமா செய்திகள்

காஞ்சனா 3 வெற்றி; லாரன்ஸுக்கு ரஜினி பாராட்டு!

Published

on

காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், மும்பை சென்றுள்ள ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து அவரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படம் 130 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ளது. அடுத்ததாக பாலிவுட்டில் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள லாரன்ஸ், அங்கு தர்பார் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். லாரன்ஸுடன் நடிகை வேதிகாவும் உடன் சென்று ரஜினியை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்களை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 வெற்றிக்காக தலைவரிடம் ஆசி பெற்றேன் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version