சினிமா செய்திகள்

யுடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த காஞ்சனா 3 ட்ரெய்லர்!

Published

on

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் முனி 4 அல்லது காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, யுடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

பிரபுதேவா, தமன்னா நடித்த பேய் படமான, தேவி 2 படத்தை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி 30 லட்சம் பார்வைகளோடு யுடியூபில் காஞ்சனா 3 முதலிடம் பிடித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்ற இயக்குநர்கள் படத்தில் நடித்தால், அந்த படம் சுமாராகத்தான் ஓடுகிறது. ஆனால், அவரே இயக்கி நடிக்கும் காஞ்சனா சீரிஸ் படங்கள் பிளாக்பஸ்டர் அடிக்கின்றன.

அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள காஞ்சனா 3 படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, தேவதர்ஷினி என கலக்கல் காம்போ அமைந்துள்ளது. ட்ரெய்லரும் மிரட்டும் வகையில் டபுள் மாஸாக அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version