சினிமா செய்திகள்

60 கோடியை அள்ளிய காஞ்சனா 3!

Published

on

என்னதான் காஞ்சனா 3 படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் உலகளவில் 60 கோடி ரூபாய் அள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலை காஞ்சனா 3 அள்ளியது. தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி ரூபாயை காஞ்சனா 3 வசூலித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 2600 திரையரங்குகளில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் முதல் வார இறுதியில் 60 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.

தமிழில் எப்படி வசூல் வேட்டையை காஞ்சனா 3 ஆடியதோ அதுபோலவே தெலுங்கிலும் காஞ்சனா 3 படத்துக்கு முதல் வார இறுதியில் 15 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.

நானியின் ஜெர்ஸி படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும் லாரன்ஸின் காஞ்சனா 3 பட வசூலை நெருங்க முடியவில்லையாம்.

Trending

Exit mobile version