சினிமா
கனா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படத்தின் டிரைலர் நாளை ரிலீசாகிறது.
வீடியோ ஜாக்கியாக விஜய் டிவியில் கலக்கிய சிவகார்த்திகேயன், நாயகனாக, பாடலாசிரியராக, கலக்கி வருகிறார். தற்போது, கனா எனும் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
நெருப்பு குமார் என மான் கராத்தே படத்தில் காமெடியனாக வந்த நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமாகும் கனா படத்தை நட்புக்காக அல்ல, நண்பனின் திறமைக்காக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைக்கப்பட்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்நிலையில், கனா படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 25) வெளியாகும் என சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.