சினிமா

இவரும் வந்துட்டாரா!.. பேட்ட படத்தில் இணைந்த இன்னொரு முக்கிய நடிகர்!

Published

on

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில் மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி நடிக்க உள்ளார்.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ”பேட்ட” படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதற்காக ரஜினி டார்ஜிலிங், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் சூட்டிங்கில் கலந்து கொண்டார். விஜய்சேதுபதி, நவாஸுதீன் சித்திகி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகிய முக்கியமான நபர்கள் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில் மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி நடிக்க உள்ளார். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வந்த கம்மட்டிப்பாடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

seithichurul

Trending

Exit mobile version