தமிழ்நாடு

சட்டசபை செல்ல வேளச்சேரியைக் குறி வைத்துள்ளாரா கமல்ஹாசன்..?

Published

on

2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாகப் போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்காக கட்சியின் சார்பில் தனது முதல் பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்கியுள்ளார் கமல். தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே கமல் சென்னையின் மயிலாப்பூர் பகுதியில்தான் போட்டியிடுவார் எனப் பல செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

ஆனால், தற்போது கமல் சென்னையில் வேளச்சேரி பகுதியில் போட்டியிடுவார் என செய்திகள் வருகின்றன. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற ஓட்டுகள் அனைத்துமே படித்த, மேம்பட்ட மக்கள் நிறைந்த மக்களிடம்தான் என்பது ஆய்வு. ஆக, படித்த, மேல்தட்டு மக்கள் நிறைந்துள்ள வேளச்சேரி பகுதியைத்தான் கமல் தேர்ந்தெடுப்பார் என டெக்கான் ஜெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஐடி மக்கள் அதிகம் வாழும் பகுதியை தேர்ந்தெடுக்க கட்சி உறுப்பினர்கள் கூறி வந்தாலும் இறுதி முடிவு கமல்ஹாசனின் கைகளிலேயே உள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version