தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்

Published

on

உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் பிரபல நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றில் சந்தோஷ் பாபு கூறியிருப்பதாவது: நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டல பதவியை வகித்து வந்த திருமதி கமலா நாசர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டலத்தில் மாநில செயலாளராக இருந்து வந்தார் என்பதும் அவர் சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் தெரிந்ததே.

Trending

Exit mobile version