செய்திகள்

எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது…கமல்ஹாசன் டிவிட்…

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு பட்ஜெட்டை அவர் வெளியிட்டதாக எதிர்கட்சிகள் முதல் நெட்டிசன்கள் வரை எல்லோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜீரோ பட்ஜெட் என்றும் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமான பட்ஜெட் என்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வரி கட்டுபவர்களுக்கு பாதகமான பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பாஜக ஆதரவு கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்த பட்ஜெட் பற்றி தனது டிவிட்டரில் ‘மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version