சினிமா செய்திகள்

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து..

Published

on

களத்தூர் கண்ணம்மாவில் 5 வயது சிறுவனாக அறிமுகமானவர் கமல்ஹாசன். நடன உதவியாளராக திரையுலகில் நுழைந்த கமல், துணை நடிகர், கௌரவ வேடம் என நடித்து பின் ஹீரோவாக மாறியவர். இவரின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாலச்சந்தர் பெரும் உதவியாக இருந்தார்.

அதன்பின் பல இயக்குனர்கள், பல படங்கள் என வளர்ந்து முன்னணி நடிகராக மாறினார். அவர் நடிப்பில் வெளிவந்த வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினேல், சிவப்பு ரோஜா, ராஜ்பார்வை, பேசும் படம், நாயகன், குணா, மகாநாதி, தேவர்மகன், மைக்கேல் மதன காமராஜன், விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களாகும்.

ஒருகட்டத்தில் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் அவர் இறங்கினார். மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியையும் உருவாக்கினார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது, விளம்பரங்களில் நடிப்பது என அசத்தி வருகிறார்.

நவம்பர் 7ம் தேதியான இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தில் First glance video வெளியானது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version