உலகம்

அமெரிக்க அதிபர் ஆனார் கமலா ஹாரிஸ்: ஜோபைடனுக்கு என்ன ஆச்சு?

Published

on

அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற ஜோ பைடன் அதிபர் ஆனார் என்பதும் அதேபோல் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெருங்குடல் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் குணமாக சிலமணி நேரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதனையடுத்து தனக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கி ஜோபைடன் உத்தரவிட்டதாகவும் இதனை அடுத்து தற்காலிகமாக அமெரிக்க அதிபராக கமலா ஹாரீஸ் அவர்கள் பதவி ஏற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் இருந்ததாகவும், ஜோபைடனுக்கு சிகிச்சை முடிந்ததும் அவர் பின்னர் மீண்டும் தனது அதிகாரத்தை வைத்துக் கொண்டதாகவும் தகவல் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version