தமிழ்நாடு

கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்!

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் கோவை தெற்கு தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிய கமல்ஹாசன் கோவையிலேயே தங்கினார். அதன் பிறகு இன்று அதிகாலை எழுந்து கோவை நகர வீதிகளில் அவர் வாக்கிங் சென்றார். அவர் வாக்கிங் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய உள்ள இடங்கள் பின்வருமாறு:

குமாரபாளையம்
பவானி
அந்தியூர்
அம்மாபேட்டை
எடப்பாடி..
மேட்டூர்
ஓமலூர்
சேலம் தெற்கு.

நாளை உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version