தமிழ்நாடு

நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன்

Published

on

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக, தேசிய அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் சமூக வலை தளங்கள் மூலமும் நேரிலும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தி ஆசி பெற்ற முக ஸ்டாலின் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இன்று வாழ்த்து கூறிய தலைவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர் முக ஸ்டாலின் அவர்களை பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

Trending

Exit mobile version