தமிழ்நாடு

வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்: கமல்ஹாசன் டுவீட்

Published

on

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி போட்டதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று பரப்பப்படும் வதந்தியை தடுத்து நிறுத்தி அரசுக்கு ஒத்துழைப்போம் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

நடிகர் விவேக் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

நடிகர் விவேக் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சற்றுமுன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது

ஆனால் மருத்துவர்கள் மிக தெளிவாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.

Trending

Exit mobile version