தமிழ்நாடு

கலவர ஸ்பெஷலிஸ்டுகளை முறியடிப்போம். உபி முதல்வர் வருகை குறித்து கமல்

Published

on

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பாரதிய ஜனதா பிரமுகர் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர். இருதரப்பினரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று வானதி ஸ்ரீநிவாசனுக்கு வாக்கு சேகரிக்க உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்தார்.

அவரது வருகையின்போது கோவையில் பாஜகவினர் கலவரம் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான் கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” ஒற்றுமையால் முறியடிப்போம்.

Trending

Exit mobile version