தமிழ்நாடு

இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்: கமல்ஹாசன் டுவீட்

Published

on

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் மூன்றாவது அணி வராதா என பெரும்பாலான பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி மூன்றாவது அணியாக இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடுமா? மக்களின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது மட்டுமின்றி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமான கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த டிவிட்டில் ’இதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கழகங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்றைய ட்வீட்டில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்.

 

Trending

Exit mobile version