தமிழ்நாடு

மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

Published

on

தரமற்ற வகையில் கட்டிய குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் தொகுதியில் உள்ள பிஎம் பார்க் என்ற பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியம் கட்டடம் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் இந்த கட்டடத்தை தொட்டாலே உதிர்கிறது என்றும் மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இந்த கட்டடத்தில் இல்லை என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும்.

மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version