சினிமா செய்திகள்

சிவாஜியாக உருமாறும் கமல்!

Published

on

கமல் தற்போது தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கமல் தனது படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2 இந்த வரிசையில் தற்போது தேவர் மகன் 2 படத்தை தயாரிக்கபோவதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, தேவர் மகன் 2 படத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் மருதநாயகம் படத்தை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன் என்றும், எம்.ஜி.ஆரின் நாளை நமதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் சந்தற்பவசமாக அந்தபடத்தில் நடிக்க முடியவில்லை ஆதனால் அந்த படத்தின் தலைப்பு உரிமத்தை வாங்கி வைத்திருக்கிறேன், என்றார்.

27 வருடங்களுக்கு முன்பு வந்த தேவர் மகன் படத்தில் கமல், கெளதமி, சிவாஜி, நாசர், ரேவதி ஆகியோர் நடித்திருப்பார்கள். இயக்குனர் பரதன் இயக்கிய இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதுபோல் தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தையும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருகிறார் கமல்.

seithichurul

Trending

Exit mobile version