தமிழ்நாடு

விவாதத்துக்கு அழைத்த பாஜக… வானதி சீனிவாசனுக்கு பல்பு கொடுத்த கமல்!

Published

on

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கமல் உட்பட மய்யத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் வெற்றி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

கோவையில் கமல், பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது, ‘கமல், வானதி சீனிவாசனுடன் விவாதம் நடத்த வேண்டும். அப்போது தான் யார் திறமையானவர் என்று தெரியும்’ என்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மய்யம் தரப்பு, ‘மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் மநீம தலைவர் கமலுடன் பிரதமர், பாஜக மத்திய அமைச்சர்கள் விவாதம் செய்யட்டும். கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களுடன் விவாதத்தை வைத்து கொள்ளலாம். அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஏற்பாடு செய்யட்டும். ஏற்கனவே இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மீண்டும் தோற்க தயாராகி வரும் வானதி சீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினரே போதும்’ என்று பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version