தமிழ்நாடு

‘திமுக கூட்டணியில் கமல்..!’- என்ன சொல்ல வராப்ல கார்த்தி சிதம்பரம்

Published

on

கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்.

‘கமல் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளோடு ஒத்துப் போகின்றன. அவர் சுதந்திர கருத்தை காங்கிரஸ் போலவே முன் வைக்கிறார். காங்கிரஸின் மதச்சார்பின்மையைப் பேசுகிறார். இப்படி அவர் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் சொல்வது தான். இந்த காரணத்தினால் அவர் காங்கிரஸோடு கூட்டணி வைக்க வேண்டும். காங்கிரஸ் தற்போது திமுகவோடு கூட்டணியில் இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு கமல் வந்தால், நிச்சயம் அரசியல் மாற்றம் வரும்’ என்று பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

மேலும் அவர், ‘நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகப்படியான, அதிக சதவீத வாக்குகள் கிடைக்காது. ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்பதனால் அவர்களுக்கு ஒரு சாரார் ஓட்டு போடலாம். ஆனால், அதனால் பெரும் மாற்றங்கள் நிகழாது’ என்றுள்ளார்.

Trending

Exit mobile version