தமிழ்நாடு

தேமுதிகவுக்கு அழைப்பா? செய்தியை பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்: கமல்

Published

on

தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகளை பார்த்து தான் நானே தெரிந்துகொண்டேன் என்று கமலஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகிய இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை என்று கூறிய கமல்ஹாசன் தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பொன்ராஜ், கூட்டணிக்கு அழைத்ததாக செய்தியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றும், அவர் செய்தது தவறு ஒன்றுமில்லை என்றும், கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை என்றும் கூறினார்.

மேலும் ஸ்டாலினை விமர்சனம் செய்தாலும் குறை வைக்கிறீர்கள், விமர்சித்தாலும் குறை வைக்கிறீர்கள் என்று கமலஹாசன் கூறிய கமல்ஹாசன், ஆளும் கட்சியையும் நான் விமர்சனம் செய்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சரத்குமார் கட்சியும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கும் என்றும் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version