தமிழ்நாடு

வீடு திரும்பினார் கமல்! கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை!

Published

on

நடிகரும் மக்கள் நீதிமன்ற தலைவருமான கமல்ஹாசன் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்து பூர்ண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு டைடேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அதன் பிறகு தொடர் வேலைப்பளு மற்றும் அரசியல் செயல்பாடுகள் காரணமாக அக்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந் நிலையில் கடந்த 18 ஆம் தேதி அக்கம்பியை நீக்கும் பொருட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை பணி நிறைவடைந்து மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.  இன்று பூர்ண குணமடைந்து வீடு  திரும்பினார்.

தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தபடியே கட்சி பணிகளைத் துவங்க உள்ளார். மேலும் மக்களிடமும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் இணையதளம் வாயிலாகவே உரையாட உள்ளார். கட்சியின் அடுத்தக் கட்ட பணிகளுக்காகத் தன்னை தீவிரமாகத் தயார்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version