தமிழ்நாடு

ரஜினி அறிவிப்புக்கு கமலின் ரியாக்‌ஷன்!

Published

on

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதற்கு, நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை ரஜினியின் ரசிகரின் மனநிலைதான் எனக்கும் உள்ளது. சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான விஷயம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்” என்று கமல் கூறியுள்ளார்.

முன்னதாக ரஜினி வெளியிட்ட அறிக்கையில், “என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆஎக்க விரும்பவில்லை.

ஆகையான் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” குறிப்பிட்டிருந்தார் ரஜினி.

 

Trending

Exit mobile version