தமிழ்நாடு

அரசியலில் இருந்து விலகுகிறாரா கமல்? முழு நேர தயாரிப்பாளராக திட்டம்!

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும், 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலையும், சந்தித்தார் .

இந்தத் தேர்தல்களில் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும், கமல்ஹாசனே கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகி முழுநேர சினிமா தயாரிப்பாளராக கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை வாங்கிக்கொள்ள ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வெற்றி பெற முடியாத அரசியலை கைவிட்டு விட்டு முழுநேர தயாரிப்பில் இறங்க கமல் திட்டமிட்டுள்ளதாக முக்கிய நடிகர்களை வைத்து திரைப்படங்கள், வெப்தொடர்கள் தயாரிக்க கமல் முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version