தமிழ்நாடு

எங்கள் கூட்டணிக்கு வாருங்கள்: காங்கிரஸ் கட்சிக்கு ம.நீ.ம அழைப்பு!

Published

on

எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கட்சியை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே கொடுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக 18 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என்றும் திமுக தரப்பு கூறுவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்துப் போட்டி அல்லது மூன்றாவது அணியுடன் இணைந்து போட்டி என்ற முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை எங்களுடைய கூட்டணிக்கு வாருங்கள் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க மக்கள் நீதி மய்யம் தரப்பு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version