தமிழ்நாடு

ஆட்சியை பிடிக்க கமல் அதிரடி பிளான்: பிரசாந்த் கிஷோருடன் 2 மணி நேரம் ஆலோசனை!

Published

on

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டி என்ற அமைப்பு. அண்மையில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நான்கு ஆண்டுகளாக வேலை செய்து தற்போது அவர் ஆந்திரா முதல்வாரக உதவி புரிந்துள்ளது. அதேபோல கடந்த இரண்டு முறையும் பிரதமர் மோடிக்கு தேர்தலில் வெற்றிபெற இந்த அமைப்பு பெருமளவு உதவி புரிந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அதேப்போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பு பிரசாந்த் கிஷோரை பயன்படுத்த இன்னனும் உறுதியான முடிவுக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வந்து ஆழ்வார் பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இது தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version