தமிழ்நாடு

ஸ்டாலின், உதயநிதியை நேரில் சந்தித்த கமல்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சற்று முன்னர் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவி பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு கமலஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவை கடுமையாக தாக்கி பேசி இருந்தாலும் மரியாதை நிமித்தமாக கமல் ஸ்டாலினை நேரில் சந்தித்து இருப்பது அவரது அரசியல் நாகரிகத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றன.

Trending

Exit mobile version