தமிழ்நாடு

இரண்டு தொகுதிகளில் போட்டியிட கமல்ஹாசன் திட்டமா? எந்தெந்த தொகுதிகள்?

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண உள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி, மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியிலும் அவர் போட்டியிடப் போவதாகவும் இதனை அடுத்து அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் அதேபோல் கோவை மாவட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது.

இதனை அடுத்து இந்த இரண்டு மாவட்டங்களில் ஏதேனும் இரண்டு மாவட்டங்களிலும் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசன் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version