தமிழ்நாடு

மே 2ஆம் தேதிக்கு பின் கமல் புதிய படத்தில் நடிக்க போய்விடுவார்: வானதி ஸ்ரீனிவாசன்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று அந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடும் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘டிவி ஸ்கிரீனில் வந்துவிட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் மக்கள் சேவை செய்பவர்களையே மக்கள் தேர்வு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மே 2ஆம் தேதிக்கு பின் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க செல்லலாம் அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார். மே இரண்டாம் தேதி தான் வரும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. வானதி ஸ்ரீநிவாசனின் இந்த கூற்றுக்கு கமல்ஹாசன் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version