சினிமா செய்திகள்

ஸ்டார் படத்தின் அடுத்த போஸ்டர்… கமல் கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்!

Published

on

ரஜினியின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி தளபதி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் பட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது கமல் கெட்டப்பில் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அதே கூட்டணியில் இணைகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த திரைப்படத்தின் பெயர் ஸ்டார் ஆகும். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அதாவது 12.12.2020 அன்று, மதியம் 12.12 மணிக்கு வெளியானது.

அதில் ரஜினிகாந்தின் தளபதி பட கெட்அப்பில் கலக்கலாக ஹரிஷ் கல்யாண் இருந்தார். ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.

இதில் கமல் கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் தோற்றமளிக்கிறார். இது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Trending

Exit mobile version