தமிழ்நாடு

MNM- கோவை தெற்குத் தொகுதியில் கமல் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

Published

on

கமல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்தித்தார். இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதற்கு ஏற்றாற் போல பெரும்பான்மை தொகுதிகளில் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கமல் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் அவர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

கமல், மதியம் 1 மணி நிலவரப்படி, 7,074 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் 6,540 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் மகளிர் அணித் தலைவர், வானதி சீனிவாசன், 4,597 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் தள்ளாடி வருகிறார்.

கோவை தெற்குத் தொகுதியை கமல்ஹாசன் கைப்பற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் மய்யத்துக்கு தேர்தல் களத்தில் கிடைக்கும் முதல் வெற்றியாக இருக்கும்.

Trending

Exit mobile version