தமிழ்நாடு

கோவை தெற்கில் கமல் முன்னிலை: வானதிக்கு மூன்றாமிடம்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது திமுக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

ஆனால் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ண தொடங்கியவுடன் திமுகவை போல் அதிமுகவும் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள தகவலின் படி திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 35 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அமமுக ஒரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் 1391 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 1345 வாக்குகள் பெற்றுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் மூன்றாம் இடத்தில் தான் இருக்கிறார் என்பதும் அவர் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் இது ஆரம்ப கட்ட நிலைதான் இன்றும் போகப்போக நிலைமை மாறும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version