சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ தாமதத்திற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம்: நீதிமன்றத்தில் ஷங்கர்

Published

on

’இந்தியன் 2’ படத்தின் தாமதத்திற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம் என ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார்

இதனை அடுத்து லைகா நிறுவனம் தொடுத்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஷங்கர் தரப்பு தற்போது ’இந்தியன் 2’ தாமதத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளது.

’இந்தியன் 2’படம் தாமதத்திற்கு லைக்கா நிறுவனமே காரணம் என்று ஷங்கர் தரப்பில் இருந்து பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசனுக்கு இந்த படத்திற்காக மேக்கப் போடும் போது ஏற்பட்ட அலர்ஜியும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாக ஒரு காரணமென ஷங்கர் தரப்பு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லைகா மற்றும் ஷங்கர் இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக முடிவுக்கு வருமாறு அறிவுறுத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்பதால் தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version